எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அரச சேவை சம்பள மீளாய்வு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கமைய இரு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அச்சம்பள அதிகரிப்பின் 50 வீதம் 2020ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் வழங்கப்படவிருந்தது. மிகுதி 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் ஜூலை மாதம் அதிகரிக்கப்படவிருந்த அரச ஊழியர்களின் சம்பள உயர்வு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.