சமூக வலைத்தளங்கள் ஊடாக வீட்டு பணிப்பெண்களை அடிமைகளாக விற்பனை செய்யும் தொழில் வழங்குனர்கள் தொடர்பில் குவைட் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த வர்த்தகம் இடம்பெறுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“பரிமாற்றத்திற்காக பணிப்பெண்கள்” அல்லது “விற்பனைக்கு பணிப்பெண்கள்” போன்ற ஹேஷ்டேக்குகள் வழியாக பெண்கள் தொழிலாளர்களாக விற்பனைக்கு வழங்கப்பட்டனர்.
அதேநேரம் வீட்டு பணிப்பெண்களை விற்பணை மற்றும் பரிமாற்றல் என்பவற்றுக்காக தொழில்வழங்குனர்கள் குறித்த பணிப்பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறான தொழில் வழங்குனர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிப் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கும் குவைட் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வேலைத்தளம்