சுமார் 14 வருடங்களுக்கு மேலாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்பாக வவுனியாக சுகாதாரத் தொண்டர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
சுகாதார தொண்டர்களாக புதிதாக நியமனம் பெற்றவர்கள் தமது கடமைகளை பொறுப்பெடுக்க பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிதாக சுகாதார தொண்டர்களாக நியமனம் பெற்றவர்களின் சேவையும் தற்காலிகமாக அரசு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும் யாழ் மாவட்ட சுகாதார தொண்டர்களும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நியமனம் வழங்குவதற்கான கடிதங்கள் நியமனதாரர்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அனுப்பப்பட்ட சுற்றுநிரூபத்திற்கமைய குறித்த நியமனத்திற்கு கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கப்படுதியதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.