கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இன்று (22) குவைத்தில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளில் இருப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இவ்வூரடங்குச் சட்டமானது இன்று அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு நாளை அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படுகிறது.
அத்தியவசிய சேவைகளில் உள்ளவர்கள் ஊரடங்குச் சட்ட நேரத்தில் நடமாடுவதற்கு விசேட அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை 26 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.