அத்தியவசிய தேவைக்கான பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதாயிருப்பின் மட்டுமே வௌியில் செல்லாம் என டுபாய் அரச அறிவித்துள்ளது. இந்நிலையில் வௌியில் சென்று திரும்பும் போது சோதனை செய்தால் மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்தமைக்கான ரசீதுகள் காட்டினால் மட்டுமே அவர்கள் அபராதங்களில் இருந்து தப்பலாம் என்று டுபாய் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிம் போது ரேடார் கருவியினால் கண்டறியப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு பொலிஸ் பரிசோதனையின் போது நிறுத்தப்பட்டால் அல்லது ஒரு ரேடார் மூலம் கண்டறியப்பட்டபோது” அவர்கள் அனுமதிக்கப்பட்ட காரணங்களினால் தான் வௌியேறினர் என்பதற்கான ஆதாரம் காட்டப்படவேண்டும் என்று பொலிஸார் பதிலளித்துள்ளனர்.
தங்கள் வீடுகளுக்கு வெளியே இருந்தார்கள் என்பதற்கான “ஆதாரத்தை” முன்வைக்க வேண்டும் என்று காவல்துறை கூறியது.
கொரோனா தொற்றிலிருந்த மீளும் கடும் முயற்சியில் நாடுகள் பல்வேறு கடுமையான திட்டங்களை முன்னெடுத்துள்ளன. அந்த வகையில் டுபாயில் மக்கள் வீடுகளை விட்டு வௌியேறுவதை கண்காணிக்க ரேடார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.