சவுதியில் 71% தொழிலாளர்களின் தொழில்வாய்ப்பிற்கு ஆபத்து?

சவுதி அரேபிய அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய அந்த நாட்டின் அரச துறையில் சேவையாற்றும் பணியாளர்களுள் 71ம% அதிகமானோரின் சேவை உடன்படிக்கையை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யுட-றுயவயn யுசயடிiஉ னுயடைல ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய அமைச்சினால் இந்த வெற்றிடத்தை நிரப்பவதற்காக, தகைமையுடைய உள்நாட்டவர்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், அவர்கள் பணியில் உள்ளீர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றுவதில் வெளிநாட்டவர்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டுள்ள அந்நாட்டு அரசாங்கம், பொதுத்துறைகளில் 91% பாரியளவான தரப்பினர் சவுதி அரேபிய நாட்டைச் சாராதவர்கள் என தொழில் துறையில் உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலைமைகளுக்கு மத்தியில் வெளிநாட்டவர்களுக்கான தொழில்வாய்ப்பை மட்டுப்படுத்தி, தொழில் சந்தையில் சவுதி நாட்டவர்களுக்கான தொழில்வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறான தொழில் வரையறைகளை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435