வெளிநாட்டு விமான நிலையங்களில் வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சற்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது அமைச்சர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் இவர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் 21 நாட்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிவாரண உதவிகளை பெறும் 54 இலட்ச மக்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிவரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிவாரண உதவிகளை பெறுவோரின் பட்டியலை தயாரிக்கும் பணி அரசாங்க அதினாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுவருகியது. இந்த குடும்பங்களுக்கு ரூபா 5,000 வை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
நன்றி: News.lk