துபாயில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வாகன அனுமதிப்பத்திர புதுப்பிப்பு மற்றும் காப்புறுதி தொடர்பான புதிய சட்டதிட்டங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்நாட்டு வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபை (RTA) நேற்று (27) அறிவித்துள்ளது.
புதிய நடைமுறைக்கமைய வாகன அனுமதிப்பத்திரமானது 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதிலேயே வெளிநாட்டவர்களுக்கு (புலம்பெயர் தொழிலாளர்களுக்கு) வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் உள்நாட்டவர்களுடைய வாகன அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் 10 வருடங்கள் என்றும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புலம்பெயர் தொழிலாளர்களின் வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய சட்டதிட்டங்களை டுபாய் அரசு அறிவித்துள்ளது.
புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது நடைமுறைப்படுத்தும் காலம் அறிவிக்கப்படாதிருந்த நிலையில் தற்போது அவர்களுடைய உத்தியோகபூர்வ இன்ஸ்டர்கிறேம் கணக்கினூடாக எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதுக்கும் குறைந்த குடிமக்கள் வாகன அனுமதிப்பத்திரம் எடுக்க முடியும் என்றும் ஏனைய வலைகுடா நாடுகளின் குடிமக்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் 21 வயதைக் கடந்த பின்னரே வாகன அனுமதி பத்திரம் பெற முடியும் என்றும் வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் பஹோர்சியான் தெரிவித்துள்ளார்.