ஸ்ரீலங்கன் விமான சேவைகள் இடைநிறுத்தம் மே 15 வரை நீடிப்பு

பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தம் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிவரை மீள நீடிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம், ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அத்தியாவசிய ஒளடதங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான வசதிகளை வழங்க தொடர்ச்சியாக செயற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விளக்கங்களை பெற்றுக்கொள்ள பயணிகள், தங்களின் முகவர்கiளோ அல்லது 011 777 1979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

அத்துடன்,  www.srilankan.com இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435