ஒரு இலட்சம் சம்பளத்துடன் ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதற்கமைய ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்த 18 இற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

பாராமரிப்பு Caregiver பணிப்பெண் சேவையில் 100ற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விற்பனை பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்பப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

011 27 91 814 என்ற அலுவலக தொலைபேசி இலக்கத்தடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ள முடியும் என்று வெளிநாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435