சுகாதார அதிகாரிகளுக்கு 10 வருட கோல்டன் வீஸா வழங்கிய டுபாய்

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் சுகாதார அதிகாரிகளுக்கு 10 வருட கோல்டன் வீஸா வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் டுபாய் ஆட்சியாளர் ஷீக் மொஹம்மட் பின் ரஷீட் அல் மக்டொன் உத்தரவிட்டுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னணியில் நின்று போராடும் புலம்பெயர் சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தமது நன்றியை தெரிவிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீஸாவை வழங்குமாறு டுபாய் ஆட்சியாளர் அந்நாட்டு சுகாதார அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 212 மருத்துவர்கள் 10 வருட வீஸா வாய்ப்பை பெற்றுள்ளனர்.

டுபாயில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட, கோல்டன் விசா மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435