வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர்களில் 330 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள்.
கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்ப்டுள்ளது.
குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு முதற்கட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 270 பேருக்கு இதுவரையில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.