ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகிய இலங்கையர்கள் சிலர் இன்று (3) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் உள்ள தமது குடிமக்களை நாடுகள் திருப்பி அழைத்து வரும் நிலையில் இலங்கையும் அழைக்கும் நடவடிக்கையை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வரும் நிலையில் இன்று ஜப்பானில் இருந்து 261 பேரும் வியட்நாமில் இருந்து 65 பேரும் இலங்கையை வந்தடைந்தனர்.
தொழில்நாடி ஜப்பான் சென்ற இலங்கையர்களை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 455 விமானத்தினூடாக நரீட்டா நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வியாட்நாமுக்கு சொந்தமான விமானத்தினூடாக அழைத்து வரப்பட்டனர்.
அழைதது வரப்பட்ட அனைவரும் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.