எதிர்காலத்தில் நாட்டுக்கு வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை அறவிடுவதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.
இந்தப் பரிசோதனைக்காக ஒருவருக்கு 6000 முதல் 8000 ரூபாய் வரையில் செலவாகும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் அந்த செலவை ஏற்பது மிகவும் கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியின் பின்னரே விமான நிலையம் திறக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.