பஹ்ரேனுக்குள் செல்வதற்கு PCR பரிசோதனை கட்டாயமானது

ஜுலை மாதம் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 11.00 மணி தொடக்கம் பஹ்ரைன் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தமது சொந்த பணத்தில் 30 பஹ்ரைன் தினார் செலுத்தி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இரசாயன கூட பரிசோதனைக்காக கட்டணம் செலுத்துதல் (be aware Bahrain) என்ற விண்ணப்ப படிவத்தின் மூலம் பஹ்ரைன் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கருமபீடத்தின் மூலம் அந் நாட்டின் பணத்தை செலுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435