இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவது மீண்டும் இடைநிறுத்தம்

கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாளை (05) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் கடமைகளில் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோர் ஈடுபடவுள்ளதால் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி துபாயிலுள்ள 660 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அதன் பின்னர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, கத்தார், ஓமான், பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435