கொவிட் 19 வைரஸ் பரவலையடுத்து முதற்தடவையாக 21 இளைஞர் யுவதிகள் நாளை (24) தொழில் நிமித்தம் தென் கொரியா செல்லவுள்ளனர் என்று இலங்கைக்கான தென் கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியா செல்ல தெரிவாகியுள்ள இளைஞர் யுவதிகள் கடந்த வாரம் இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் ஜியோன் வுன்ஜின்னை சந்தித்தனர்.
சினேகபூர்வ கலந்துரையாடலின் போது இது மிக முக்கியமான சந்தர்ப்பம் என்று தென் கொரிய தூதுவர் தெரிவித்திருந்தார்.
தமது நாட்டின் அபிவிருத்தியுடன் கைகோர்க்கவும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தவும் இவ்விளைஞர் யுவதிகளுக்கு முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்கொரியாவில் சுமார் 23,000 இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் இதுவரை 520 மில்லியன் அமெரிக்க டொலர் வரை நாட்டுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
adstudio.cloud