தென் கொரியா செல்லும் இரண்டாவது குழுவினர்

தமது முதல் சேவைக்காலத்தை பூர்த்தி செய்து நாடு திரும்பிய தென் கொரியாவில் பணியாற்றியவர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் அந்நாட்டை நோக்கி பயணிக்கவுள்ளனர்.

தமது முதல் சேவைக் காலமான வருடங்களும் 10 மாதங்களையும் பூர்த்தி செய்து விடுமுறைக்காக நாடு திரும்பியவர்களே மீண்டும் அந்நாட்டை நோக்கி பயணிப்பதற்கான ஏற்பாடுகளை பணியகம் மேற்கொண்டுள்ளது.

தென்கொரியாவிற்கு தொழில்வாய்ப்பை நாடி செல்லும் 1008வது குழு இதுவாகும். உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் அல்லுற்ற இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் இருந்து தொழில்வாய்ப்புக்காய் தென்கொரியா செல்லும் இரண்டாவது குழு இதுவாகும்.

இவர்கள் இரண்டாம் சேவைக்காலத்திற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள நிலையில் மறுபடியும் 4 வருடங்களும் 10 மாதங்களும் அந்நாட்டில் பணியாற்றுவர்.

இச்சேவைக்காலத்தில் எந்தவிதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435