குவைத்தில் தொழிலாளர் சட்டம் மற்றும் வதிவிட விதி மீறல்கள் செய்பவர்களை கைது செய்ய குவைத்தில் நாடு தழுவிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
குவைத் நகராட்சி மற்றும் குடியிருப்பு புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்புடன் மனிதவள பொதுக்குழுவால் இந்த தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் பகுதிகளை கண்காணித்த பின்னர் இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த வாரத்தில் ஏராளமானவர்கள் தொழிலாளர்கள் சட்டம் மற்றும் வதிவிட விதிமீறல்கள் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்களின் தகவல்களை மேற்க்கோள்காட்டி உள்ளூர் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேடல் குழு முக்கியமாக ஜிலிப், கைதான், ஃபர்வானியா, ஜஹாரா, வஃப்ரா மற்றும் கஃப்த் ஆகிய பகுதிகளில் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் குடியிருப்பு விசாக்கள் இல்லாமல் வணிக விசாக்களில் சட்டவிரோதமாக பணிபுரிந்தவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குவைத் தமிழ் சோஷியல் மீடியா