CTA தொழிலாளர்கள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

நாட்டிலுள்ள அனைத்து தரப்பினமீதும் புதியவிதமான அடக்குமுறைகளை பிரயோகிக்கக்கூடிய, உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் Counter Terrorism Act (CTA) விடயத்தில் வரும்முன் காப்பதே சிறந்ததாகும்;. தொழிற்சங்கங்களின் உரிமைகளுக்கு தடையை ஏற்படுத்தும் இந்த சட்டமூலம் மிகவும் பாரதூமானதாகும்.

– மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான இளையதம்பி தம்பையா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் உத்தேசிக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்திலே, பல்வேறு விதமான கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. நாட்டின் எதிர்கால நிலைமைகளில் இதுபோன்றதொரு சட்டம் எவ்வாறான பாதக நிலைமைகளை ஏற்படுத்தும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளில் அது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எவ்வாறானது அதன் சட்டரீதியான தாக்க நிலைமைகள் என்ன? தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் உரிமைகளில் எவ்வாறாக பாதகத் தன்மையை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் தொழிலாளர்களுக்கு விளக்கமளிப்பது வேலைத்தளம் இணையதளத்தின் நோக்கமாகும்.

இதற்கமைய, சட்ட விளக்கங்கள் உள்ளிட்ட மேலும் பல முக்கியமான விடயங்கள் தொடர்பில், மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான இளையதம்பி தம்பையா எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வி கீழே.

கேள்வி: அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எவ்வாறான தன்மையைக் கொண்டுள்ளது?

பதில்:
– உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அனைத்து தரப்பினருக்குமே பாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. நடைமுறையில் உள்ள சட்டத்தைவிட 3 விடயங்கள் இந்தச் சட்டமூலத்தில் வித்தியாசமானதாக உள்ளது.

முதலாவது,
– கைதுசெய்யப்படும் சந்தேகத்துக்குரிய ஒருவரை 72 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருக்கலாம் என்ற சரத்து மாற்றப்பட்டு, 48 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது,
– மரண தண்டணையானது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது,
– குற்ற ஒப்புதல் வாக்குமூலமானது முன்னர்போன்று அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்படாமல், நீதவானிடம் அறிக்கைப்படுத்தவேண்டும்.

இந்த 3 விடயங்களும் சற்று வித்தியாசமானதாக இருக்கின்றதே தவிர, இந்தச் சட்டமூலம் மிகவும் பாதகமானதாக உள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் பிரிவு 81 மிகவும் முக்கியமானதாகும். பொலிஸ்;மா அதிபர் ஒரு நபரையோ அல்லது ஒரு அமைப்பையோ சந்தேகத்திற்குரியவராக ஃ சந்தேகத்திற்குரியதாக கருதுவாராயின்,

தனிநபரை தடை செய்து கைதுசெய்யவும், அமைப்பை தடை செய்து அதன் நடவடிக்கைகளையும் தடைசெய்ய முடியும்.

இவ்வாறான நிலையில், ஒரு தொழிற்சங்கம் அரசாங்கத்திற்கும் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது அல்லது கவிழ்க்க முயற்சி செய்கின்றது என்று பொலிஸ்மா அதிபர் கருதுவாராயின் அதனைத் தடை செய்ய முடியும்.

பொலிஸ்மா அதிபரின் சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு தனி நபரையோ அல்லது அமைப்பையோ தடைசெய்ய முடியும்.

தனிநபராயின்,
அவரை வீட்டுக்காவலில் வைக்க முடியும்.
– அவர் தொழில் புரிபவராயின், அவர் தனது அலுவலகத்திற்கு இந்தப் பாதையால்தான் பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கலாம்.
– வெளிநாட்டுக்கு செல்வதைத் தடுக்கலாம்.
– அதாவது சிறைச்சாலைக்கு வெளியிலும் அவர் ஒரு கைதியைப்போல நடத்தப்படலாம்.

பொலிஸ்மா அதிபர் ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சந்தேகம் கொள்வாராயின், அதாவது எவராவது ஒருவர் முறைப்பாட்டு மனு ஒன்றை அனுப்புவாராயின், ஆராய்வுகள் எதுவும் இன்றி அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறாயின் இது ஒரு மோசமான சட்டமூலம்தான்.

அதேநேரம், அமைப்புகளையும் தடை செய்யலாம். அமைப்புகள் எனும்போது, கட்சிகள், தொழிற்சங்கங்கள், நலன்புரி சங்கங்கள் என்பனவற்றைத் தடை செய்யலாம்.

தடை செய்யப்பட்டதன் பின்னர் நாங்கள் வேறு எங்கும் சென்று கேள்விகளை எழுப்பிக்கொண்;டிருக்;க முடியாது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டு நிதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தாங்கள் பயங்கரவாத அமைப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே அந்தத் தடை நீக்கப்படும்.

அதற்கு எத்தனை வருடகாலம் செல்லும் என்பதைக் குறிப்பிட இயலாது. ஏனெனில், மேன்முறையீட்டு நீதிமன்;றில் ஒரு வழக்கைத் தாக்கல்செய்ய வேண்டுமாயின், பெருமளளவான பணம் அவசியமாகும்.

ஒரு வழக்கு விசாரணை நிறைவுக்கு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலம் எடுக்கும். இவ்வாறான நீண்;ட செயற்பாடு உள்ளது.

கேள்வி: பயங்கரவாத தடைச் சட்டத்திலிருந்து Prevention Of Terrorism Act (PTA) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எவ்வாறு வேறுபடுகின்றது?

பதில்:
– ஆயுதம் பயன்படுத்துவது பயங்கரவாதம் என்ற நிலைமைதான் முன்னர் இருந்தது. நாட்டுப் பிரிவினை, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஆயுத நடவடிக்கையில் ஈடுபடுதல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றை அசௌகரியத்துக்கு உட்படுத்துதல், அது தொடர்பான வற்புறுத்தல்கள், பலவந்த நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அது தொடரபாக கொலை செய்தல், குற்றமிழைத்தல், அதற்காக தகவல் வழங்குதல் முதலான செயற்பாடுகள் பயங்கரவாதம் என்று கூறப்படுகிறது.

ஆனால், முன்னர் இருந்த சட்டத்தைவிட முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலத்தில் தண்டனைகள் குறைவாக இருந்தாலும்கூட, புதியவிதமான அடக்குமுறைகளைக் கொண்டதாக அமைகின்றது.

இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காக ஏதாவது ஒரு செயற்;பாட்டில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினக்கு எதிராக பயங்காரவாத தடைச் சட்டத்தின்கீழ் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட முடியும்.

உதாரணமாக தொழிற்சங்கம் ஒன்று தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, அவை யாவும் தோல்வியில் முடிவடைந்து போராட்டத்;தை முன்னெடுக்க முயற்சித்தால், அவர்களின் செயற்பாட்டை அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கையாக கருதி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்.

அதுமட்டுமல்ல இந்த சட்டமூலத்தின் இன்னுமொரு பாரதூரமான விடயம், வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளுடன் தொடர்புடையவர்களையும், இலங்கையில் தடைசெய்யலாம். அல்லது வெளிநாடு ஒன்றில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளும் தரப்பினர், அந்த நாட்டு அரசாங்கத்திற்கு அமைய தடைசெய்ய முடியும்.

அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் அல்லது அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் ஒரு அமைப்பை அரசாங்கத்தினால் தடை செய்ய முடியும். அதேநேரம், தொழிலாளர்கள் போராட்டம் செய்வதை தடுப்பதற்கு இந்தச்
சட்டத்தைப் பயன்படுத்த முடியும். இந்தப் போராட்ட நடவடிக்கையை அரசாங்க எதிர்ப்பு செயற்பாடாக கருதமுடியும்.

கேள்வி: இந்தச் சட்டமூலத்தினால், தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற்சங்க உரிமைகளை இழக்கு நிலை ஏற்படுமா? அல்லது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை மீறுகின்ற அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடக்கூட முடியாமல் போகுமா?

பதில்:
– நான் ஏற்கனவே கூறியதுபோல, இந்தச் சட்டத்தை தொழிலாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும். அரசாங்கம் ஒரு சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியிருக்கும்போது, தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட முடியாது. தொழிலாளர்கள் கட்டாயமாக தொழிலுக்குச் செல்ல வேண்டும்.

இல்லாவிட்டால், இது அவர்களின் தொழில் நிலைமையில் பாதிப்பை ஏற்படுத்க்கூடும். இதனூடதாக தொழிற்சங்க உரிமை மட்டுமல்ல, அனைத்து தனிமனித உரிமையும் பறிக்கப்படுகிறது.

இதுவரையான காலப்பகுதியில் தொழிற்சங்கம் ஒன்றை தடை செய்வதற்கான சட்டம் ஒன்;று இருக்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் அமைப்பு என்று வரும்போது இவை அனைத்தும் அமைப்பு என்ற வகைபாட்டுக்குள் உள்ளாகும். அதுமட்மல்ல அரசியல் கட்சியைக்கூட அதாவது எதிர்க்கட்சியைக்கூட தடைசெய்ய முடியும்.

கேள்வி: தொழிற்சங்கங்களுக்கு இந்தச் சட்டமூலத்தின் ஊடாக பாதிப்பு வருமாயின், அதனைத் அவர்கள் தவிர்ப்பதற்கான சட்டரீதியான ஏற்படுகள் எதுவும் உண்டா?

பதில்:
– ஒரு தொழிற்சங்கத்தை தடைசெயதால் மாத்திரம், அதனைத் தடைசெய்யக்கூடாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடமுடியும். இதனூடாக தாங்கள் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் அல்ல என்று வழக்காடி அந்தத் தடையை நீக்கலாம்.

ஆனால், ஒருவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின், வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து அவர் விடுதலையாகி வந்தால் மாத்திரமே அந்த நடவடிக்கைகள் முடிவுக்குவரும்.

கேள்வி: இவ்வாறான பாரதூரமான நிலைமைக்கு மத்தியில் தொழிற்சங்கங்கள் எவ்வாறு செயற்படலாம்?

பதில்:
– இலங்கையில் ஒவ்வொரு சட்டமும் நடைமுறைக்கு வருவதற்;கு முன்னர், உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அது அரசியல் யாப்புக்கு ஏற்புடையதா என்பது குறித்து ஆராயப்படும்.

ஆனால், இந்த சட்டமூலம் தொடர்பான விடயத்தில் 7 வழக்குகளே தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் ஊடாக தண்டனை குறைப்பு எனற விடயம் மாத்திரமே பேசப்பட்டது. ஆனால்;, இந்த 81 ஆம் பிரிவின்கீழ் வரும் விடயங்கள் குறித்து கருத்துகள் முன்வைக்கப்படவில்லை. அமைப்புகள் தொழிற்சங்கங்கள் முதலாவை பாதிக்கப்படும் என்பது குறித்து எவரும் கருத்துக்களை முன்வைக்கவில்லை.

கேள்வி: நீங்கள் அல்லது உங்களது தொழிற்சங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்யவில்லையா?

பதில்:
– இவ்வாறானதொரு வழக்கு ஒன்றில் முன்னிலையாக பெருமளவான பொருளாதார வசதி அவசியமாகும். இந்த நிலைமையின் காரணமாக குறித்த வழக்கு விடயத்தில் நாங்கள் தலையீடு செய்யவில்லை. எனினும், தலையீடு செய்த தரப்பினர் இதுபோன்ற பாரதூரமான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியிருக்கவில்லை.

கேள்வி: தொழிற்சங்கவாதி மட்டுமல்லாது ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல விடயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்:
– எம்மைப் பொறுத்தவரையில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும் அவசியமில்லை, புதிதாக கொண்டுவருவதற்கு எதிரபார்க்கப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். நடைமுறையில் உள்ள சாதாரண சட்டமே போதுமானதாகும். அதன் ஊடாக எவரையும் கைதுசெய்ய இயலாது என்ற நிலைமை இல்லை. ஆனால், சாதாரண சட்டத்தில் தடுத்துவைக்கும் முறைமையில் பிரச்சினை இருக்குமாயின், அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அடுத்ததாக தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும் தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட ஒன்றுதான். எனினும், 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், நடைமுiயில் உள்ள சட்டம் நீக்கப்படுவதுடன், புதிய சட்டம் கொண்டுவரப்படுவதையும் தவிர்ப்பதே சிறந்ததாகும்.

கேள்வி: இந்தச் சட்டமூலம் தொடர்பான விடயத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் என்பனவற்றின் நிலைப்;பாடு எவ்வாறாக உள்ளது?

பதில்:
– இதுபோன்றதொரு வலுவான சட்டம் இல்லாத காரணத்தினால்தான், தற்போது ஏற்பட்டுள்ள பயங்கரவாத நிலைமையைக் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுகிறது.

மறுபுறத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்றோர்கள், மரண தண்டனையை நீக்கி, நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தைவிடவும் நெகிழ்வான சட்டமாக உள்ளமையினால், இது பயங்கரவாத்தை ஊககுவிக்கும் சட்டமாக அமையும் எனக் குறிப்பிடுகின்றன.

கேள்வி: தொழிற்சங்களை மட்டுமன்றி, நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரையும் இவ்வாறாக பாரதூரமான நிலைமை இட்டுச்செல்லும் இந்த சட்டமூலம் கொண்டுவரப்படாமல் இருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்;டும்?

பதில்:
– இந்த சட்டமூலமானது நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும். அரசியல்வாதிகள் அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, இந்தச் சட்டமூலத்தைக் கொண்டுவராமல் இருப்பதற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் என்பன ஒன்றிணைந்து இதற்கான அழுத்தற்களைப் பிரயோகிக்க வேண்டும். வரும்முன் காப்பதே சிறந்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435