தனியார் மற்றும் அரசாங்க சார்பு பிரிவில் ஊழியர்களுக்காக ஓய்வூதிய நன்மைகளை வழங்கும் நோக்கில் 1958 ஆம் ஆண்டு இல 15 கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சேவை கொள்வோரினால் ஊழியர் ஒருவரை சேவைக்கு இணைத்துக் கொண்ட பின்னர் அந்த ஊழியரின் தகவல்கள் தொழில் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு சேவை கொள்வோர் கடமைப்பட்டுள்ளதுடன் இவ்வாறான தகவல்களை வழங்குவது என்பது தொடர்பில் மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் எத்தகைய காலப்பகுதிக்குள் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட காலம் முதல் இவரிடமிருந்து பெறப்படும் குறிப்பிட்ட தகவல்களை உரிய காலத்திற்குள் வேலைக்கொள்வோரினால் தகவல்கள் தொழில் திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு வேலைக் கொள்வோரை குறிப்பிடுவதற்கும் சேவைக் கொள்வோரினால் இவ்வாறு பெற்றுக் கொடுப்பதிலிருந்து தவறும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட சேவையாளருக்கு இந்த தகவல்களை நேரடியாக அறிவிக்கக் கூடிய வகையில் 1958 ஆம் ஆண்டு இல 15 கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கட்டளைகளை தயாரிப்பதற்காக அமைச்சரவையில் இல்லாத தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.