ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளி ஒருவர் இன்று (24) காலை தப்பிச் சென்றுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த எல்சியாம் நஷீம் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் இராணுவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவர் குறித்து தகவலறிந்தால் அல்லது இந்நபரை கண்டால் 119 – 0718591017, 0718592290, 0718591864 ஆகிய இயக்கங்களுக்கு அழைக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.