O/L பரீட்சையை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையையும்இ கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க சகல தரப்பினரும் ஒததுழைப்பு வழங்கினார்கள். அதேபோன்று சாதாரண தரப் பரீட்சையையும் நடத்துவதற்கு சிறப்பான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிடுகையில்இ பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435