ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழும் அனைத்து விசேட தேவைக்குரிய நபர்களுக்கும் இலவசமாக வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய அந்நாட்டு தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
ஸ்மார்ட் போனுக்காக ஏற்படுத்தப்பட்ட செயலியை தரவிறக்கம் செய்து ஐம்பது திர்ஹமுக்கு குறைவாக இவ்வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்று அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது.