UAEயில் மோசமான காலநிலை- சாரதிகள் கவனம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்றும் (06) நாளையும் (07) பனிமூட்டத்துடன் பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் காணப்படுவதால் வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சுட்டிக்காட்டியுள்ள அந்நாட்டு வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த டிசம்பர் மாத காலத்தில் இருந்தாற் போன்று வேகமான குளிர் காற்று, பனி, புழுதிப் புயல், ஐஸ் மழை என்பன மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, அரேபிய வளைக்குடா மற்றும் ஓமான் கடற்பரப்பு சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்குமாறும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435