UAE இல் வீதி விதிமுறைகளில் மாற்றம்: மீறினால் சட்டநடவடிக்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீதி விதிகளில்; மாற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, கார்களை செலுத்துவதற்காக புதிய வேக கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி வாகன போக்குவரத்து பாதுகாப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கார்களை செலுத்துவதற்கான அதிகூடிய வேகமானது மணிக்கு 140 கிலோமீற்றர் என வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள வீதிகளுக்கு மாத்திரம், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேக கட்டுப்பாடு கருத்திற்கொள்ளப்படும் என்றும், எனவே, குறித்த வீதிகளை சரியாக அடையாளம்கண்டுகொள்ளுமாறு சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வேக கட்டுப்பாட்டை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதாகவும், உரிய தண்டனை அல்லது அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அபுதாபி வாகன போக்குவரத்து பாதுகாப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

சாரதிகளினதும், பாதசாரிகளினதும், பொதுச் சொத்துக்களினதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த வேக கட்டுப்பாடு அறிமுகப்படுத்தபடுவதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435