UAE, சவுதியில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 21 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று 22 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்களில் 21 பேர் மத்திய கிழக்கில் இருந்து நாடுதிரும்பியவர்களாவர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கு இறுதியாக கொவிட்-19 தொற்று உறுதியானது.

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானது.

அத்துடன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணியிருந்த நுரைச்சோலை தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்றுறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக உயர்வடைந்துள்ளது.

2 ஆயிரத்து 64 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 677 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435