அடுத்தவருடம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
சர்வதேச தொழில்வாய்ப்பு நிபுணர் ரொபர்ட் ஹல்ப்பின் கருத்தின்படி புலம்பெயர் தொழிலாளர்களை கவர்தல் மற்றும் அவர்களுக்கு அங்கு நீண்டாகாலம் பணியாற்றுவதற்கான விருப்பத்தை ஏற்படுத்துவதற்காக விரைவில் சம்பள உயர்வு வழிகாட்டல் வௌியிடப்படும்.
சிறு மற்றும் மத்திய தர சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டும் இச்சம்பள உயர்வு அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கமைய 2.5 வீதம் சம்பளத்தில் வளர்ச்சி ஏற்படுவதாக எதிர்பார்க்கப்படுவதுடன் கணக்காளர், நிதிச்சேவை, தொழில்நுட்பம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் சட்ட நிபுணர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணிப்பாளர்கள், நிதித்திட்டமிடல் நிபுணர்கள், திட்டமிடல் முகாமையாளர்களின் சம்பளம் முறையே 5.5 வீதம், 5.1 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் பாரிய நிறுவனங்களின் பணிப்பாளர்களின் சம்பளம் 6.5 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிசார் துறைகளில் பணியாற்றுவோரின் சம்பளம் 1.2 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் தொழில்நுட்பச்சார் ஊழியர்களின் சம்பளம் 2.4 வீதத்தால் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மனித வளம் மற்றும் நிர்வாகச்சார் துறை வேலைவாய்ப்புக்களுக்கு 3.8 வீத சம்பள உயர்வும் சட்டஞ்சார் ஊழியர்களுக்கு 3 வீத சம்பள உயர்வும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைத்தளம்