UAE யில் புதிய போக்குவரத்துச் சட்டம்

ஐக்கிய அரபு இராச்சிய போக்குவரத்து விதிகளை மேலும் கடுமையாக்க அந்நாட்டு உள்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராச்சிய போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் கடுமையாக போக்குவரத்து விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய போக்குவரத்து விதிகளில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட விடயங்களை விடவும் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, போக்குவரத்து விதிகளை மீறி பிற வாகனங்களை முந்திச் செல்ல முயலும் வாகன சாரதிகளுக்கு ஆயிரம் திரஹம் அபராதம் விதிக்கப்படவுள்ளதுடன் 6 கரும்புள்ளிகளும், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் ஆயிரம் திர்ஹம் அபராதமும் முன்னெச்சரிக்கையின்றி வாகனத்தை திருப்பினால் ஆயிரம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதை வஸ்து மற்றும் அதற்கு இணையான வேறு மருந்துகள் உட்கொண்டு விட்டு வாகனம் ஓட்டினால், நீதிமன்றத்தினூடாக தண்டனை நிர்ணயிக்கப்படுவதுடன் 23 கரும்புள்ளிகள் வழங்குவதுடன் 60 நாட்களுக்கு வாகனம் முடக்கப்படும்.

மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் நீதிமன்ற தண்டனையுடன் 23 கரும்புள்ளிகள் மற்றும் 90 நாட்கள் வாகனம் முடக்கப்படும்.

வீதி சமிக்ஙைஞயை மீறி சென்றால் ஆயிரம் திர்ஹம் அபராதத்துடன் 12 கரும்புள்ளிகளும் 30 நாள் வாகன முடக்கமும்.

வாகனமோட்டும் போது கையடக்க தொலைபேசியை பயன்படுத்தினால் 800 திர்ஹம் அபராதமும் 4 கரும்புள்ளிகளும் வழங்கப்படும்.

சட்ட விரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றால் 3000 திர்ஹம் அபராதமும் 24 கரும்புள்ளிகளும் வழங்கப்படும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிச் சென்றால் 2000 திர்ஹம் அபராதமும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்படும்.

அனுமதிக்கப்பட்டதை விடவும் 50 சதவீத கருப்பு கண்ணாடித்திரையை ஒட்டினால் 1500 திர்ஹம் அபராதம்.

10 வயதுக்கு குறைந்த அல்லது 145 சென்றிமீற்றர் அளவுக்கு குறைந்த பிள்ளைகள் முன்னிருக்கையில் அமர வைக்கப்பட்டால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.

பாதுகாப்பு பெல்ட் அணியாவிட்டால் 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட 80 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றால் மூவாயிரம் திர்ஹம் அபராதம். 23 கரும்புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகனம் முடக்கம்

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 60 கிலோ மீற்றர் வேகமாக சென்றால் 2000 திர்ஹம் அபராதம், 12 கரும்புள்ளிகள் மற்றும் 30 நாட்களுக்கு வாகன முடக்கம்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 60 கிலோ மீற்றருக்குள் சென்றால் 1500 திர்ஹம் அபராதம், 6 கரும்புள்ளிகள் மற்றும் 15 நாட்களுக்கு வாகன முடக்கம்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 50 கிலோ மீற்றர் அதிகமாக சென்றால் ஆயிரம் திர்ஹம் அபராதம்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 40 கிலோ மீற்றர் அதிக வேகமாக சென்றால் 700 திர்ஹம் அபராதம்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 30 கிலோ மீற்றர் வேகம் அதிகமாக சென்றால் 700 திர்ஹமும் 30 கி.மீ அதிக வேகமாக சென்றால் 600 திர்ஹமும் 20 கிலோ மீற்றர் அதிக வேகமாக சென்றால் 300 திர்ஹமும் அபராதமாக விதிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435