இரைச்சலுடன் கூடிய வாகனங்களை ஓட்டும் சாரதிகளுக்கு 2000 திர்ஹம் அபராதமாக விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இரைச்சலுடன் கூடிய வாகனங்களை வீதியில் ஓட்டினால் சாரதியின் அனுமதிப்பத்திரத்திற்கு 12 கருப்பு புள்ளிகள் வழங்கப்படுவதுடன் வாகனங்களும் கைப்பற்றப்படும் என்றும் ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் எச்சரித்துள்ளனர்.