ஐக்கிய அரபு இராச்சியத்தின் பல பகுதிகளில் இன்று (02) காலை நேரத்தில் மூடுபனி நிலவுகிற போதிலும் நன்பகலாகும் போது 49 செல்சியஸ் தொடக்கம் 50 செல்சியஸாக அதிகரிக்கும் என்று அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
எனினும் வெப்பநிலை 59 செல்சியஸ் வரையில் உணரப்படும் என்றும் வாகன சாரதிகள் வாகனங்களில் பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறு அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
வௌியில் செல்லும் போது பாதுகாப்பான முறையில் செல்லுமாறும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு மற்றும் சில தெற்கு பகுதிகளில் பிற்பகல் அதிக மேக மூட்டத்துடன் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் கடுங்காற்றின் காரணமாக மணற்சூறாவளி ஏற்படக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.