ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேகமாக பரவும் இன்புளுவென்ஸா தொற்று

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருவதனால் அனைவரையும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறு அந்நாட்டு மருத்துவத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுடன் நிமோனியா தாக்கத்துக்குள்ளான பாகிஸ்தானைச் சேர்ந்த 35 வயது புலம்பெயர் தொழிலாளர் டுபாயில் உயிரிழந்ததையடுத்து மருத்துவர்கள் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருந்த குறித்த நபர், இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா தாக்கத்துக்குள்ளாகி வைரஸ் மூளையை தாக்கியதால் மருத்துவமனையில் வைத்தே சுயநினைவிழந்த சில நிமிடங்களில் மரணத்தை தழுவியுள்ளார்.

இன்புளுவென்ஸா தொற்றுக்குள்ளான சுமார் 50 பேர் தினமும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகைத் தருகின்றனர் என்றும் உலகின் பல நாடுகளில் கடந்த மாதம் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்றும் நாளுக்கு நாள் இவ்வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வபாயத்தில் இருந்து தப்புவதற்கு உடனடியாக உரிய நேரத்தில் தடுப்பு மருந்தை ஏற்றுவது அவசியம் என்கிறார் ஐக்கிய அரபு இராச்சியத்தின் யுனிவர்சல் மருத்துவமனையின் உள்ளக விசேட வைத்திய நிபுணர் முஹம்மட் அஸ்ரப்.

நாட்டில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக மனித உடலில் நோயெதிர்ப்புச்சக்தி குறைவடைவதால் பற்றீரியா மற்றும் வைரஸ் தாக்கம் அதிகரித்து மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைவலி, காய்ச்சல், உடல் நோ, தொண்டை நோ, இருமல், நாசியிலிருந்து சளி வடிதல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு என்பன இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகும்.

இவ்வாறான அறிகுறிகள் தோன்றுமாயின் உடனடியாக சிகிச்சை பெறுவதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை முறையாக கையாள வேண்டும். சவர்க்காரம் பயன்படுத்தி கைகழுவுதல், தேவையின்றி அதிக மக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், வாய் மற்றும் நாசியில் அநாவசியமாக கைகளை வைத்தல், தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்தல், போஷாக்கான உணவை உட்கொள்ளல் என்பன இவ்வைரஸ் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

நீங்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் UAE பணியாற்றுபவராக இருந்தால் இத்தினங்களில் உங்கள் உடல்நிலை குறித்து அவதானமாகவும் பாதுகாப்பாவும் இருங்கள்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435