ஐக்கிய அரபு இராச்சியம் – சட்டம் அறிவோம்

கேள்வி- நான் டுபாயின் பிரதான நகரமொன்றில் உள்ள கம்பனியில் பணியாற்றுகிறேன். பிள்ளைகள், பெற்றோர் போன்ற எனது நெருங்கிய உறவினர்களை என்னுடன் தங்க வைத்துக்கொள்வதற்கான வீஸாவுக்கு பொறுப்பேற்று விண்ணப்பிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனது உடன்பிறப்புகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுடைய வீஸாவுக்கு பொறுப்பேற்று விண்ணப்பிக்க முடியுமா?

பதில்- மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் முதன்மை உறவினராக கருதப்படுவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனியாக வசிப்போர் அவருடைய முதன்மை உறவினர்களுக்காக வீஸாவுக்கு பொறுப்பேற்று விண்ணப்பிக்க முடியும். எனினும் தனியாக வசிப்போர் விசேட சந்தர்ப்பங்களில் ஐக்கிய அரபு இராச்சிய உள்ளக மற்றும் வௌிவிவகாரங்களுக்கான பொது தலைமையத்தின் General Directorate of Residency and Foreigners Affairs – UAE (the ‘GDRFA’) இல் அனுமதி பெற்று விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக உங்கள் சகோதரர்கள் மிகச் சிறியவர்களாகவும் கவனிக்க யாருமில்லாத நிலையில் சொந்த நாட்டில் வசித்து வந்தால், அல்லது உங்கள் சகோதரர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ விசேட கவனம் கொள்ளப்படவேண்டியவர்களாக இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தகவல்களை பெற GDRFA நாடலாம்.

நீங்கள் விண்ணப்பிக்கும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாயின் அனுமதி வழங்கப்படலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435