
அண்மைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, 123 நாடுகளைச் சேர்ந்த 42,522 பேர் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்ப முற்படுகின்றனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில், 34,881 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர்.
வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த மற்றும் இரண்டு அமைச்சுக்களினதும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் நேற்று மாலை (மே 29, 2020) நடைபெற்ற சந்திப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, மே 27ஆந் திகதிய நிலவரப்படி, 123 நாடுகளைச் சேர்ந்த 42,522 பேர் இலங்கைக்கு மீண்டும் நாடு திரும்ப முற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களில், 34,881 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவதுடன், அவர்களில் 20,893 பேர் மத்திய கிழக்கில் வசிக்கும் அதே நேரத்தில், 4,961 பேர் குறுகிய கால வீசாவையுடையவர்களும், 2,016 பேர் மாணவர்களுமாவர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.