இணையதளத்தினூடாக பணியாளர்களை பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது ஓமானில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொழில்நுட்ப அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஓமான் மனித வள அமைச்சின் இணையதளமான www.manpower.gov.om ஊடாக உரிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்விணையதளத்தினூடாக வீட்டுப்பணிப்பெண்கள், சமையற்காரர்கள் மற்றும் தோட்ட வேலையாட்கள் போன்றோரை தற்போது பணிக்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எனினும் பணியாளர்களுக்கு விண்ணப்பிப்போர் சரியான தகவல்களை வழங்குவது அத்தியவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓமான் பொலிஸாரின் உதவியுடன் இப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஓமான் மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜி.டி.என் ஒன்லைன்/ வேலைத்தளம்