ஐக்கிய அரபு இராச்சிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை புதிதாக வடிவமைக்க அந்நாட்டு பிரதி ஜனாதிபதியும் டுபாய் ஆட்சியாளருமான ஷீக் மொஹமட் பின் ரஷீத் அல் மக்டோம் அனுமதி வழங்கியுள்ளார்.
பாதுகாப்பை மேப்படுத்தும் வகையில் மேலதிக இலத்திரனியல் மறைகுறிகள் (Digital codes} மேலதிகமாக கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையில் புதிதாக இணைக்கப்படவுள்ளன.
இன்று அபுதாபியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்படவுள்ள உள்ளடக்கப்படவுள்ள இலத்திரனியல் சர்வதேச தரம் வாய்ந்தனவாக அமையவுள்ளன.
கடவுச்சீட்டுகளில் மறைகுறியாக்கப்பட்ட குறியீடுகள் மக்கள் பயணிக்கும்போது அவற்றை சரிபார்க்க உதவும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுகின்றன, மேலும் கடவுச்சீட்டு குறியீட்டின் இந்த வகை இலத்திரனியல் மேம்படுத்தலை அமல்படுத்திய முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. இது உலகளவில் அமீரக கடவுச்சீட்டு மீது பாதுகாப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.