எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலா பயணிக்களுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பணிகள் மேலும் தாமதமாகாலம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் ஊடாக நபர்கள் வருவார்களாயின், அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதே சிறந்த நடவடிக்கையாகும்.
தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதாயின், சுற்றுலாத்துறையினர் வருகைத்தர மாட்டார்கள்.
எனவே, சுற்றுலாத்துறையை பாதுகாப்பதற்காகவும், சுற்றுலாத்துறையினர் மூலம் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் வேறு வழிமுறைகளை பயன்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதன் பின்னரோ விமான நிலையம் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மூலம் : Sooriyanfmnews.lk