காலாவதியான வதிவிட வீசாக்கள், அமீரக அடையாள அட்டைகளை புதுப்பிக்க

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் காலாவதியாகியிருந்தால் புதுப்பிக்க உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காலாவதியான வதிவிட விசாக்கள் மற்றும் அமீரக அடையாள அட்டைகளை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை (12) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையம் (The Federal Authority for Identity and Citizenship – ICA) அறிவித்துள்ளது.

மே மாதம் காலாவதியான வதிவிட வீசாக்கள் மற்றும் அமீரக அடையாள அட்டைகளுக்கான புதுப்பித்தல் விண்ணப்பங்கள் ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் ஜூன் மற்றும் ஜூலை 1 -11ம் திகதி காலாவதியானவற்றை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் 10ம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பித்தல் நடவடிக்கையை கட்டம் கட்டமாக முன்னெடுப்பதானது கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான சமூக விலகலை கடைப்பிடிக்க ஏதுவாக அமையும் அவ்வாணையகம் தெரிவித்துள்ளது.

வதிவிட வீசாக்கள் மற்றும் அமீரக அடையாள அட்டைகள் காலாவதி திகதி நீடிப்பது தொடர்பில் அண்மையில் வௌியிட்டிருந்த அறிவிப்பினை அந்நாட்டு அமைச்சரவை நேற்றுமுன்தினம் (10) ரத்து செய்துள்ளது.

வதிவிட வீசாக்கள் மற்றும் அமீரக அடையாள அட்டைகளை புதுப்பிப்பதற்கான 3 மாதகால பொது மன்னிப்புக் காலத்தை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435