மத்திய கிழக்கில் இருந்து வருவோருக்கு அந்தந்த நாடுகளிலேயே PCR பரிசோதனை

கொவிட் 19 நோய்த்தொற்று பரவல் அதிகளவில் உள்ள நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனையை குறித்த நாடுகளிலேயே மேற்கொண்டு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

வெளிநாடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது மீண்டும் நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு மேலதிகமாகவாகும்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதுவராலயம் லெபனான் வெளிநாட்டு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக அந்நாட்டிலேயே PCR பரிசோதனையை மேற்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமது நாட்டுக்கு வரும் கணிசமானவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது இந்நிலைமை மேலதிக பிரச்சினையாக உள்ளதாக கொவிட் ஒழிப்பு செயலணியுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளில் இருந்து மீண்டும் தமது நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு அந்நாடுகளிலேயே PCR பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435