ஒன்பது மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா வீசாவில் சார்ஜா நகருக்கு சென்ற இலங்கை குடும்பமொன்று அண்மையில் அந்நாட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐந்து பேரைக் கொண்ட அக்குடும்பம் தங்கியிருந்த ஹோட்டலின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளதை அந்நாட்டுப் பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இத்தற்கொலை முயற்சியில் 55 வயதான தந்தை, 52 வயதான தாய் மற்றும் அவர்களுடைய மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன் இரு மகள்மாரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிகிச்சை பெற்று வரும் பெண்களில் ஒருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் மற்றொருவர் சாதாரண காயங்களுடன் அல் கவாயிக் மருத்துவமனையில் (Al Kuwaig hospital) சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தற்கொலை சம்பவம் தொடர்பில் பலரிடம் சாட்சிகள் பெறப்பட்டதன் பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென்றும் சார்ஜா பொலிஸ் தெரிவித்துள்ளது.