தென்கொரியா மீண்டும் செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு

தென்கொரியா செல்ல எதிர்பார்த்துள்ள இலங்கையர்கள் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளை ஆலோசனைகளை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வௌியிட்டுள்ளது.

தென்கொரியாவில் பணியாற்றி வந்த நிலையில் விடுமுறைக்காக நாடு திரும்பி மீண்டும் பணிக்கு செல்ல எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக இவ்வாலோசனை வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தென்கொரியா செல்லும் இலங்கையரை இரு வார தனிமைப்படுத்தலுக்குட்படுத்த தொழில் வழங்குநர் இணக்கம் தெரிவித்து உறுதிபடுத்தல் கடிதம் வைத்திருத்தல் அவசியம். இதற்கான விண்ணப்பத்தை இவ்வழிமுறைகள் www.slbfe.lk என்ற இணையதளத்தினுல் பிரவேசித்து பூர்த்தி செய்து இ.பி.எஸ் இ (EPS) மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதற்கமைய குறித்த மத்திய நிலையத்தில் பெறும் விண்ணப்படிவத்தை கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பணியகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். உரிய உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் இந்நாட்டு கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவனம் மற்றும் இ.பி.எஸ் (EPS) நிறுவனத்தினூடாக உறுதிபடுத்தப்பட்ட பின்னர் உரிய பயனாளிக்கும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்படும். விமான நிலையத்திற்கு செல்லும் போது இவ்வனுதி கடிதத்தை அருகில் வைத்துக்கொள்வது கட்டாயமானது என அவ்வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினால் மின்னஞ்சல் முகவரி கிடைக்கப் பெற்றமையை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தின் பிரதி, கடவுச்சீட்டின் புகைப்படத்துடன் கூடிய பக்கத்தின் பிரதி வீசாவின் பிரதி மற்றும் பணியகத்தின் பணியகத்தின் பதிவுக் கட்டணமாக ரூபா 3456.00 என்பவற்றுடன் பணியகத்தில் கையளிக்க வேண்டும்.

விமானநிலையத்திற்கு செல்லும் போது பணியகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம், கடவுச்சீட்டின் இரு பிரதிகள், மீண்டும் கொரியாவில் நுழைவதற்கான வீசா அட்டை (Re-entry Alien Card)என்பவற்றுடன் செல்லுதல் வேண்டும். அத்துடன் ஏனைய சட்டவிதிகளும் செல்லுபடியாகும்.

இது குறித்த மேலதிக தகவல்களை பணியகத்தின் 1989 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435