நாடு திரும்ப உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரும் இஸ்ரேல் வாழ் இலங்கையர்கள்

கொவிட் 19 தொற்று காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது இருக்கும் தம்மை விரைவில் மீள அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் சிலர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு மீள திரும்பும் நோக்கில் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகத்தில் ஏலவே பதிவு செய்துள்ள சுமார் 100 இலங்கையர் இவ்வாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்த்தில் குறிப்பிட்டுள்ளதாக அக்குழுவிலுள்ள ஒருவரான ஜனத் விமல லங்காதீப பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இக்குழுவில், கர்ப்பிணித் தாய்மார்கள், இருதய நோயாளர்கள், புற்றுநோயாளர்கள் போன்றவர்களும் வீஸா காலாவதியானர்கள், தொழில் வீஸா ரத்தானவர்கள் போன்றோரும் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு நவம்பர் மாதம் நிறைவுற முன்னர் இலங்கை வர விமானமொன்றை ஏற்பாடு செய்து வழங்குமாறும் அவ்விலங்கையர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435