ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், வெளிநாட்டு அமைச்சு, கொவிட்-19 ஜனாதிபதி பணிக்குழு மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து 291 நிர்க்கதியான இலங்கையர்களை ஓமானிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யு.எல். 206 மூலம் 2020 நவம்பர் 26ஆந் திகதி இலங்கைக்கு திருப்பி அனுப்பியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்பவர்கள், தொழில்களை இழந்தவர்கள், பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்தோர் மற்றும் விடுதலை செய்யப்ப்பட்ட கைதிகள் போன்ற ஏராளமான இலங்கையர்ள் பிரதானமாக இந்தக் குழுவில் உள்ளடங்குவர்.
ஓமானிலுள்ள பல சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 34 இலங்கைக் கைதிகளை சுமுகமாக தமது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கு இலங்கைத் தூதரகத்துக்கு உதவி புரிந்த ஓமான் நாட்டின் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தனது மனமாந்த நன்றிகளை ஓமான் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
அனைத்து 291 இலங்கையர்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்குமிடம், உணவு மற்றும் ஏனைய வசதிகள் 14 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இலங்கைத் தூதரகம்
மஸ்கட்
2020 நவம்பர் 29