சிவப்பு சமிக்ைஞயை கவனிக்காது சென்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்தை ஏற்படுத்திய ஆசிய நாட்டைச் மோட்டார் சைக்கிள் சாரதியொருவருக்கு 10,000 கட்டார் ரியால் அபராதம் விதித்து டோஹா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.
போக்குவரத்து பொலிஸாரின் சாட்சி மற்றும் விசாரணைகளை அடிப்படையாக கொண்டு நேற்றுமுன்தினம் (24) நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.
சிவப்பு விளக்கை ஒளிர்ந்து கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளாது தொடர்ந்து பயணித்து மற்றொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதால் சிறு காயங்களுக்குள்ளான குறித்த சாரதி தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது இயலாமை மற்றும் அங்கவீனங்களை சுட்டிக்காட்டி எந்தவொரு மருத்துவ சான்றிதழ்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.
பொறுப்பற்ற வகையில் வாகனமோட்டியமை வீதிப் போக்குவரத்து சட்ட திட்டங்களை மதியாமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.
வேலைத்தளம்