புலம்பெயர் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் நலன்புரியை மேம்படுத்த புதிய திட்டங்களை வகுக்க இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் இரு மாத காலத்திற்குள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்களை நலன்பயக்கும் வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களிலேயே இம்மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்மாற்றத்தினூடாக குறித்த நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் சம்பளம் மற்றும் நலனை மேம்படுத்துவதே நோக்கமாகும்.