மத்திய கிழக்கில் 3,000 இலங்கையர்களுக்கு கொவிட்-19 தொற்று

14 மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரியும் இலங்கையர்களில், சுமார் 3,000திற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள அதேவேளை, அவர்களில் சுமார் 70திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்கள் மற்றும் கொன்சியூலர் அலுவலகங்களின் ஊடாகஇ வெளிவிவகார அமைச்சுக்கு இந்த விடயம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிகளுக்கு சென்று, உடன்படிக்கை காலம் நிறைவடைந்த சுமார் 45,000திற்கும் அதிகமானோர், தாயகம் திரும்ப முடியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அந்தந்த நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய சுமார் 2,700 இலங்கையர்கள் குணமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435