கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னணியில் இருந்து பணியாற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான விசேட அலுவலகம் ஒன்றை அமைக்க ஐக்கிய அரபு இராச்சியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னணி தொழிலாளர்களை நீண்ட காலம் அங்கீகாரம் வழங்கும் வகையில் இவ்வலுவலகம் நிறுவப்படுகிறது.
த ப்ரொண்ட் லைன் ஹீரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த அலுவலகம் அபுதாபியில் நிறுவப்பட்டுள்ளது.
நெருக்கடிகள் மற்றும் அவசர காலங்களில் முன்னணி தொழிலாளர்கள் ஆற்றிய முக்கிய பங்கைப் குறித்து விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதுடன் அவர்களின் முயற்சிகளை அங்கீகரித்து அவர்களின் தியாகங்களை புரிந்துகொண்டு ம், அவர்களின் தேவைகளை கவனித்து அவர்களின் அவசியங்களை பூர்த்தி செய்வ செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் 95 ஆம் இலக்க கூட்டாட்சி ஆணையினூடாக வழியாக வழியாக ஜனாதிபதி ஹிஸ் ஹைனஸ் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இந்த அலுவலகத்தை அமைத்துள்ளார். புதிய நிறுவனத்திற்கு அபுதாபியின் முடிக்குரிய இளவரசரும் துணைத் தலைவரும் ஐக்கிய அரபு இராச்சிய ஆயுதப்படைகளின் பிரதி உயர்ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமை தாங்குவார். .
குறித்த அலுவலகமானது நிதி மற்றம் நிர்வாக சுதந்திரத்தினுடன் கூடிய சுயாதீன தன்மை மிக்கதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆணைப்படி, முன்னணி சுகாதார ஊழியர்களை வரையறுத்தல், அவர்களை அடையாளம் காண பயன்படுத்தல், அளவுகோல்களை நிறுவுதல், அத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து, அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான உத்திகள் மற்றும் முன்முயற்சிகளைத் தயாரித்து செயல்படுத்துதல் ஆகியன குறித்த அலுவலகத்தினூடாக முன்னெடுக்கப்படும் பணிகளாகும்.