மோட்டார் வாகன சாரதிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை குறுந்தகவல் மூலமாக அனுப்ப அபுதாபி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மூடுபனி, மோசமான காலநிலை மற்றும் விபத்துக்கள் தொடர்பான தகவல்களை குறுந்தகவல் ஊடாக அதிவேக பாதையை பயன்படுத்தும் மோட்டார் சாரதிகள் மற்றும் அப்பாதைகளுக்கு அருகாமையில் வசிப்போருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேவையற்ற வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இப்புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அபுதாபியில் நேற்று பனிமூட்டமாக காணப்படுவதாகவும் எனவே அவதானத்துடன் வேகத்தை குறைத்து மோட்டார் வாகனங்களை செலுத்துமாறும் ஸ்மார் கோபுரங்களூடாக பொலிஸார் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.
இப்புதிய நடைமுறையை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது என்பது தொடர்பில் பயனாளர்களுக்கு பயிற்சி செயலமர்வை நடத்த தேசிய அவரச, நெருக்கடி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.