முகவர்களை வழி நடத்த கட்டாரில் அரசாங்க நிறுவனம் உருவாக்கம்!

வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைப்பதற்கான அரசாங்க நிறுவனம் ஒன்றை நிறுவ கட்டார் அரசு தீர்மானித்துள்ளது.

முகவர் நிலையங்களை ஒரு நிறுவனத்தின் கீழ் இயங்கச் செய்யும் நோக்கிலேயே இவ்வரச நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது.

கட்டார் உள்விவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு, பொருளாதார, வர்த்தக அமைச்சு, மற்றும் கட்டார் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிறுவனம் அமைக்கப்படவுள்ளது.

புதிதாக தொழிலாளர்களை இணைத்துக்கொள்ளும் போது தனிநபர்கள் மற்றும் கம்பனிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்நிறுவனம் அமைக்கப்படவுள்ளதாக கட்டார் பிரதமரும் உள்விவகார அமைச்சருமான ஷீக் அப்துல்லா பின் நாஸீர் பின் கலீபா அல் தானி தெரிவித்தார்.

வேலைத்தளம்/ கட்டார் டே

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435