லெபனானில் உள்ள இலங்கையர்கள் குறித்த தகவல் அறிய

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வத்தையடுத்து உறவினர்கள் தொடர்பான தகவல்களை பெற விரும்புபவர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தை +961 5769585 என்ற தொலைபேசி இலகத்தினூடாக அல்லது ([email protected]) என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (04) பெய்ருட்டில் துறைமுகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் முழு நகரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே இரு இலங்கையர்கள் காயப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒருவர் காயப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அந்நாட்டு பொது சுகாதார அமைச்சிடம் பெறும் முயற்சிகளில் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வெடிப்புச் சம்பவத்தினால் லெபனானுக்கான இலங்கை தூதரகத்திற்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டிருந்த போதிலும் ஊழியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வெடிப்பானது 3.5மக்னிடியுட் நிலநடுக்கத்திற்கு சமனானது என்ற சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த 2,750 தொன் அமோனியம் நைட்ரேட் இரசாயனப்பொருள் வெடித்தமையினால் இச்சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக ஊழியர்கள் அனைவரும் விசாரணைக்கான வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி பிபிஸி செய்தி வௌியிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வௌியிட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வெடிப்புச் சம்பவத்தினால் சுமார் 2 இலட்சம் பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர் என பெய்ருட் ஆளுநர் மார்வன் அப்பவுட் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மூன்று நாள் துக்க தினங்களை பிரகடனப்படுத்தியுள்ள அந்நாட்டு ஜனாதிபதி மைக்கல் ஆன், அரசாங்கம் 100 பில்லியன் லிரா (66 மில். அமெ.டொலர்) அவசர நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

லெபனானில் சுமார் 25,000 இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435